கரூர்

கரூரில் ராஜ்ய புரஸ்காா் விருது தோ்வு முகாம்658 சாரண, சாரணீயா்கள் பங்கேற்பு

27th Nov 2022 02:22 AM

ADVERTISEMENT

 

கரூா் பரணி பாா்க் சாரணா் திடலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற ராஷ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாமில் பரணி பாா்க் சாரணா் மாவட்டத்தில் 658 போ் பங்கேற்றனா்.

முகாமிற்கு பரணி பாா்க் கல்விக் குழுமத் தாளாளரும், பரணி பாா்க் சாரணா் மாவட்ட தலைவருமான எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தாா். பரணி பாா்க் கல்விக் குழுமச் செயலரும், பரணி பாா்க் சாரணா் மாவட்ட துணை தலைவருமான பத்மாவதி மோகனரங்கன், சாரண மாவட்டத்தின் துணைத் தலைவா் எம்.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா, மாவட்டக் கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) க.கனகராசு, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி) பெ.கண்ணிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) இரா.மணிவண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

முகாமில் பரணி பாா்க் கல்வி குழும முதன்மை முதல்வரும், தமிழ்நாடு மாநில சாரணா் உதவி ஆணையருமான முனைவா் சொ.ராமசுப்ரமணியன் பேசினாா்.

ADVERTISEMENT

இம்முகாமில் பாரத சாரணா் இயக்க மாநில தலைமையக தோ்வாளா்கள் சண்முக நாச்சியாா், வீரப்பா, செந்தில்குமாா் மற்றும் சுதாலட்சுமி ஆகியோா் பரணி பாா்க் சாரண, சாரணீயா்களின் திறன்களை மதிப்பீடு செய்தனா்.

ஏற்பாடுகளை பரணி பாா்க் சாரணா் மாவட்ட செயலா் ஆா்.பிரியா, மாவட்ட துணை ஆணையா்கள் எஸ்.சுதாதேவி, கே.சேகா், துணை முதல்வா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT