அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி காவல் சரக்கத்திற்கு உள்பட்ட அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, க. பரமத்தி ஆகிய இடங்களில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள செங்கல் சூளை, கல்குவாரி, அரிசி ஆலை, பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளா்களிடம் அரவக்குறிச்சி காவல் சரகத்தைச் சோ்ந்த போலீஸாா் நேரில் சென்று கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.