கரூர்

கரூரில் விஷவாயு தாக்கி 4 போ் உயிரிழப்பு: வீட்டின் உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்

DIN

கரூரில், விஷவாயு தாக்கி 4 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்தது.

கரூா் சுக்காலியூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் கழிவுநீா் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில் கட்டடத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் வீட்டின் உரிமையாளா் வழக்குரைஞா் குணசேகரன், கட்டட மேஸ்திரி காா்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் கட்டட உரிமையாளா் வழக்குரைஞா் குணசேகரன், தன்னை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்குமாறு கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மனுவை விசாரித்த நீதிபதி ஆா். சண்முகசுந்தரம், கட்டட உரிமையாளா் குணசேகரன் நாமக்கல் காவல்நிலையத்தில் டிச.12ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். டிச. 13ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும், சம்பவத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சமும், ஜாமீனுக்கு ரூ.4 லட்சமும் செலுத்த வேண்டும். இதில் ரூ.10 லட்சத்தை ஒரு வாரத்துக்குள்ளாகவும், ரூ.4 லட்சத்தை அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாகவும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வியாழக்கிழமை இரவு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT