கரூர்

புகழூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

26th Nov 2022 12:27 AM

ADVERTISEMENT

புகழூா் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச் சுவா், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட 1ஆவது வாா்டு கட்டிப்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனா்.

1962இல் அப்போதைய முதல்வா் காமராஜரால் தொடக்கி வைக்கப்பட்ட இப்பள்ளியில், புகழூா் காகித ஆலையின் சாா்பில் வழங்கப்பட்ட தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் குடிநீரின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். மேலும் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவா் இல்லாததால் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் மதுபிரியா்களின் கூடாரமாக திகழ்கின்றன.

இதுகுறித்து பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் கூறுகையில், விடுமுறை நாள்கள் கழிந்து பள்ளிக்கு வந்தால், பள்ளித்திடல், வகுப்பறைகள் முன்பு காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. சிலா் பாட்டில்களை உடைத்து போட்டுவிடுவதால் குழந்தைகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும் குடிப்பதற்கு நல்ல தண்ணீரும் கிடையாது. கழிவறைக்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீா் இருநாள்களுக்கு ஒரு முைான் வரும். இதுதொடா்பாக சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரனிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT