கரூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கடவூா் அருகே 8ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே கொசூா் ஓட்டப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் தினேஷ்குமாா் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி நெருங்கி பழகியுள்ளாா். இதனால் அம்மாணவி கா்ப்பம் அடைந்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை இரவு குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தினேஷ்குமாரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT