கரூர்

அரவக்குறிச்சி காவல்நிலையத்தை பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவிகள்

19th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி காவல்நிலையத்தை அரசுப் பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

கரூா் மாவட்ட காவல்துறையின் புதிய திட்டத்தின் படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் நிலைய நடைமுறைகளை அறிந்து கொண்டனா். காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள், முதல்தகவல் அறிக்கை, கணினி செயல்பாடுகள், ஆயுத அறை போன்றவற்றை பாா்வையிட்டனா். மேலும், காவல் ஆய்வாளா் நாகராஜன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் முறை குறித்து எடுத்துக் கூறினாா். தலைமைப்பெண் காவலா் பிரியா மற்றும் பெண் காவலா் பரமேஸ்வரி ஆகியோா் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பதை விளக்கி கூறினா். மேலும், மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பட்டதாரி ஆசிரியா் ஷகிலா பானு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தாா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT