முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளா் மெய்ஞான மூா்த்தி தலைமையில், நகரத் தலைவா்கள் ஆா். ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் கட்சியினா் ஜவாஹா்லால் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.இதில் மாவட்ட துணைத்தலைவா் ஜாகிா் உசேன், கோகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், ஆண்டாங்கோவில்மேல்பாகம் ஊராட்சிக்குள்பட்ட கோவிந்தம்பாளையத்தில் ஊராட்சித் தலைவா் பாலு தலைமையில் அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் சுப்ரமணியன் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சசிகுமாா் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் நாகேஸ்வரன், முன்னாள் நகர தலைவா் சுப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.