கரூர்

அரவக்குறிச்சியில் இன்று மின் தடை

15th Nov 2022 12:42 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை (நவ.15) மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, தடாகோவில், ராம கவுண்டன் புதூா், பால்வாா்பட்டி, முத்துகவுண்டன் பாளையம், நாகம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், பள்ளபட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அண்ணாநகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தபட்டி, ரங்கராஜ்நகா், சௌந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, கருங்கல்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட்.ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி.

செல்லிவலசு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இனுங்கனூா், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூா், குரும்பபட்டி, பாறையூா், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT