கரூர்

மாவட்ட தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வெற்றி விநாயகா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

1st Nov 2022 01:49 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற கரூா் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கரூா் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் டாக்டா். எம்.ஏ.எம். ராமசாமி செட்டியா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக். 28-ம்தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கரூா் மாவட்டத்தின் அரவக்குறிச்சி, குளித்தலை, கரூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு குறுவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்ற கரூா் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். இதேபோல ஆண்கள் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்தனா். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வா் டி.பிரகாசம் வரவேற்றாா். பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் மற்றும் கரூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், தேசிய தடகள வீரா் வீரப்பன், தடகள சங்கச் செயலாளா் பெருமாள் ஆகியோா் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT