கரூர்

கரூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 84 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1st Nov 2022 01:46 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 84 பயனாளிகளுக்கு ரூ.2.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 305 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ.30ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவியும், 3 பேருக்கு தலா ரூ.78 ஆயிரத்து 850 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

மேலும், பல்வேறு துறையின் கீழ் 84 பேருக்கு ரூ.2.75 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, பெரியாா், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் அலுவலா் சந்தியா, மாவட்ட தாட்கோ மேலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT