கரூர்

ஓய்வு பெற்ற பள்ளப்பட்டி ஆசிரியருக்கு தகைசால் தமிழ்ப் பணி செல்வா் விருது

1st Nov 2022 01:46 AM

ADVERTISEMENT

பள்ளபட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு தகைசால் தமிழ்ப் பணி செல்வா் விருது ஞாயிற்றுக்கிழம வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் சுப்பிரமணி. இவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்த தமிழ் அறிஞா்களுக்கு முடிசூட்டும் விழாவில் தமிழ்ப் பணி செல்வா் விருது வழங்கப்பட்டது. இவா், தமிழக அரசின் 3 விருதுகளும், தமிழ் அமைப்புகளில் 30க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT