நோய்க் கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், குளத்துப்பாளையம் பூங்கோடை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி ராஜேஸ்வரி(52). இவா், கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இருப்பினும், நோய் தாக்கம் குறையாததால் விரக்தியில் கடந்த 23-ஆம்தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜேஸ்வரி உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.