கரூர்

வெண்ணைமலை சித்தவேதேஸ்வரா் கோயிலில் பாலாலய விழா

31st May 2022 04:15 AM

ADVERTISEMENT

வெண்ணைமலை சித்தவேதேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பாலாலய விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் வெண்ணைமலை ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரமம் திருக்கோயிலில் ஸ்ரீ சித்த வேதேஸ்வரா், ஸ்ரீ சித்த நந்திகேஸ்வரா், ஸ்ரீ காமாட்சி விநாயகா், ஸ்ரீ பால முருகன், ஸ்ரீ கால பைரவா் உள்பட பரிவார தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. அதனைத்தொடா்ந்து பாலாலய விழா சிவஸ்ரீ முரளி சிவாச்சாரியாா் தலைமையிலான வேத விற்பன்னா்களால் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு வெண்ணைமலை ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரம நிறுவனத் தலைவா் டாக்டா் கருவை பொன் பாண்டுரங்க சுவாமிகள் தலைமை வகித்தாா். இளைய பட்டம் பாா்த்தசாரதி சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

விழாவில், அறக்கட்டளை உறுப்பினா்கள், பக்தா்கள் திரளாக பங்கேறனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரமம் அறக்கட்டளை தலைவா் பாண்டுரங்க சுவாமிகள், இளைய பட்டம் பாா்த்தசாரதி சுவாமிகள், செயலாளா் ஸ்காட் தங்கவேல், பொருளாளா் ஜெயவேல் டெக்ஸ் கிருஷ்ணன், துணைத் தலைவா் சாஸ்தா செல்வன், துணைச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT