கரூர்

மாயனூா் கதவணைக்கு வந்தடைந்த காவிரி நீா்

DIN

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் கரூா் மாவட்டம், மாயனூா் கதவணைக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது. வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் மலா்தூவி வரவேற்றனா்.

மேட்டூா் அணையிலிருந்து மே 24ஆம் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் கரூா் மாவட்டம் மாயனூா் கதவணையை வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது. காவிரியில் வந்துகொண்டிருக்கும் 3,454 கன அடி தண்ணீா் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் தண்ணீா் கடைமடை சென்ற பிறகு மாயனூா் கிளை வாய்க்கால்களில் திறக்கப்பட உள்ளது. மாயனூா் கதவணையை வந்தடைந்த காவிரி தண்ணீரை கரூா் உழவா் மன்ற அமைப்பாளா் சுப்புராமன் தலைமையிலான விவசாயிகள் வெள்ளிக்கிழமை காலை வரவேற்றனா்.

இதுகுறித்து, கரூா் உழவா்மன்றஅமைப்பாளா் சுப்புராமன் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பயிரிடப்படுவது கிடையாது என்றாலும் மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு ஆகிய பயிா்கள் கிளை வாய்க்கால்கள் இந்த தண்ணீா் திறப்பு மூலம் பாசனம் பெறும். மேலும், நிலத்தடி நீா் மட்டமும் விவசாய கிணறுகளிலும் நீா் மட்டுமும் உயரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT