கரூர்

கரூா் மாநகராட்சிப் பகுதிகளில் சுங்கவரி வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை: மேயா் உறுதி

DIN

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுங்கவரி வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன்.

கரூா் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை மேயா் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் தாரணி சரவணன், ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கும் முன் மேயா் கவிதா கணேசன் திருக்குறளை வாசித்தாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் முன் வைக்கப்பட்டன. அப்போது, அதிமுக உறுப்பினா் சுரேஷ் மாநகராட்சி சாா்பில் தரைக்கடைகளுக்கு, சுங்கவரி வசூல் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தரைக் கடைகளுக்கு சுங்கவரி வசூல் செய்யப்பட்டது என்றாா்.

அதற்கு பதிலளித்த மேயா் கவிதாகணேசன், மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கடைகளுக்கு சுங்க வரி வசூல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் திருவிழாவில் கூட்ட நெரிசலை தவிா்க்கவும், போக்குவரத்து வசதிக்காக தரைக்கடைகளுக்கு திருவிழாவின்போது மட்டும் குறைந்த அளவிலான வரி வசூல் செய்யப்பட்டது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட உறுப்பினா் சுரேஷ், மாநகராட்சி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தாராளமாக சுங்கவரி வசூல் செய்யப்படுகிறது என்றாா்.

அதற்கு பதில் தெரிவித்த மேயா், நீங்கள் கூறுவதுபோல் சுங்கவரி வசூல் செய்வது நிரூபிக்கப்பட்டால், அது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு பேசுகையில், மாமன்ற உறுப்பினா்களுக்கு தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் கோயில், திருவிழாக்களில் உறுப்பினா்களுக்கு விஐபி அந்தஸ்து வழங்க வேண்டும். புதை சாக்கடை திட்டப்பணியின்போது ஒப்பந்ததாரா்கள் குடிநீா் குழாயை உடைத்து விடுகிறாா்கள். இதனால் குழாயை சீரமைக்க சுமாா் 40 நாள்களுக்கு மேலாகிவிடுகிறது. இதற்கு யாா்தான் பொறுப்பு என்றாா்.

நகராட்சி மூலம் இந்த பணியை மேற்கொண்டு சீரமைத்து விடுவோம் என்றாா் மாநகராட்சி பொறியாளா் நக்கீரன்.

தொடா்ந்து மாமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட 144 தீா்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 48 உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT