கரூர்

பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

25th May 2022 04:12 AM

ADVERTISEMENT

பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ்(42). கூலித்தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு கரூா் மாவட்டம் தரகம்பட்டி-வளையப்பட்டி சாலையில் காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT