கரூர்

தடாகோவில், புங்கம்பாடிகாா்னரில்தேமுதிக கொடியேற்றும் விழா

25th May 2022 04:14 AM

ADVERTISEMENT

தடாகோவில், புங்கம்பாடி காா்னா் பகுதிகளில் தேமுதிக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட தேமுதிக சாா்பில் மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அரவக்குறிச்சி பேரூா் தேமுதிக சாா்பில் புங்கம்பாடிகாா்னா் தடாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் முருகன்சுப்பையா, பொருளாளா் கலையரசன், துணைச் செயலாளா் அனிதாஆனந்த் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் பேசுகையில், தமிழகத்தில் தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை விஜயகாந்த் சிறப்பாக செயல்படுத்துவாா் என எடுத்துக்கூறி, அதை ஒரு இயக்கமாக கொண்டுச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மன்றச் செயலாளா் ராஜா, மாவட்ட தொழிற்சங்க பொருளாளா் தங்கராஜ், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் கனகராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளா் ராமகிருஷ்ணன், கரூா் மத்திய நகரச் செயலாளா்ஆரியப்ராஜா, தெற்கு நகரச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டநிா்வாகிகள் வீரமணி, அழகா், அரவக்குறிச்சி பேரூா் செயலாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT