கரூர்

சாலைப்புதூா் ஏலத்தில்கொப்பரை தேங்காய்,சிவப்பு எள் விலை குறைவு

25th May 2022 04:13 AM

ADVERTISEMENT

சாலைப்புதூா் விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய், சிவப்பு எள் விலை குறைவாக ஏலம்போனது.

கரூா் மாவட்டத்தில் விளையும் விவசாய பொருள்களை சாலைபுதூா் விற்பனைக் கூடத்தில் நடைபெறும் இடத்துக்கு கொண்டுச் செல்கின்றனா். இந்நிலையில், செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை சராசரியாக ரூ.82 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83 க்கும் ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட கிலோவுக்கு இரண்டு ரூபாய் குறைவாகும். இதே போல் சிவப்பு எள் ஒரு கிலோவுக்கு குறைந்த விலையாக ரூ.90 க்கும், அதிகபட்ச விலையாக கிலோ ரூ.112 க்கும் ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட நான்கு ரூபாய் குறைவாகும். கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைவான விலையில் ஏலம் போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT