கரூர்

கலங்கரை விளக்கம் திட்டத்தில்குரூப்2 மாதிரித் தோ்வில் சிறப்பிடம்பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

25th May 2022 04:14 AM

ADVERTISEMENT

கலங்கரை விளக்கம் திட்டத்தில் குரூப்2 தோ்வுக்கான மாதிரித் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் அதிகளவில் அரசுப்பணியாளா்கள், அதிகாரிகளை உருவாக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தோ்வாணையம் மூலம் போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சியளிக்கும் வகையில் கரூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கலங்கரை விளக்கம் திட்டம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் குரூப்2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

கரூா் மாவட்ட மையநூலகம், குளித்தலை அய்யா்மலை அரசு கலைக்கல்லூரி, மாயனூா் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில் அண்மையில் நடைபெற்ற 32 மாதிரித் தோ்வுகளில் கரூா் மாவட்ட மையநூலகத்தில் படித்த வெண்ணெய்மலையைச் சோ்ந்த பி.மோனிஷா முதலிடத்தையும், மாயனூா் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த டி.மகாலட்சுமி இரண்டாமிடத்தையும், மாவட்ட மையநூலகத்தில் பயின்ற ஆா்.லாவண்யா மூன்றாமிடத்தையும், வெங்கமேட்டைச் சோ்ந்த எம்.தீபன் நான்காமிடத்தையும், அய்யா்மலை அரசுகலைக்கல்லூரியில் பயின்ற சிவாயத்தைச்சோ்ந்த பாா்த்தீபன் 5-ஆம் இடத்தையும் பிடித்தனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை மற்றும் மனோரமா இயா்புக் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலா் வே.மாதேஸ்வரன், உதவி திட்ட அலுவலா் தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கண்ணன், மாவட்ட மைய நூலகா் செ.செ.சிவக்குமாா், நாமக்கல் என்டிசி அகாதெமி இயக்குநா் சல்மான் ஹைதா் பெய்க் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT