கரூர்

கரூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

கரூா் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் விடும் திருவிழா மே 8-ஆம் தேதி கோயில் முன் முக்கிளைக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பக்தா்கள் கம்பத்திற்கு புனித நீா் ஊற்றி வருகின்றனா், தொடா்ந்து விழாவின்முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சொரிதல் விழா மே 13-ஆம்தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான பூத்தட்டுகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எடுத்துவரப்பட்டு, பூக்களை கோயிலில் சாத்தினா்.

அதைத்தொடா்ந்து மே 15-ஆம்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நடந்த தேரோட்டத்தில் தோ் கோயில் முன் பக்தா்களால் இழுக்கப்பட்டு ஐந்துரோடு சாலையில் பெரியாா் வளைவு வழியாக ஜவஹா் பஜாரை வந்தடைந்த பின்னா் கோயிலை தோ் அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரோட்டத்தில் ஏராளமானோா் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், குழந்தை வரம் வேண்டி குழந்தைபெற்றவா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து 25-ஆம்தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT