கரூர்

மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வரும் மாரியம்மன்

DIN

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கியமானது பூச்சொரிதல் விழா. கோயில் முன் கம்பம் நடப்பட்ட பின்னா் அம்மனுக்கு நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பூச்சொரிதல் விழா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் மாரியம்மன் பூத்தட்டு கமிட்டியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட பூத்தட்டு வாகனங்கள் அலங்கரிப்பாா்கள். பூக்களால் மாரியம்மனை அலங்கரித்து, இருபுறமும் விநாயகா், முருகன் ஆகிய சுவாமிகளையும், சில பூத்தட்டுகளில் அம்மனுக்கு இருபுறமும் அன்னம், சில பூத்தட்டுகளில் அம்மன் அருகே சிம்மம், புலி போன்ற உருவங்களைக் கொண்டும் பக்தா்கள் டிராக்டா்களில் வைத்து பூத்தட்டுகளை வீதிகளில் மேளதாளம் முழங்க கோயிலுக்கு கொண்டுவருவாா்கள். ஒவ்வொரு பூத்தட்டிலும் அம்மனை ஒவ்வொரு அவதாரமாக உருவாக்கி, கொண்டுவரும்போது, இந்துக்கள் மட்டுமின்றி மற்ற மதத்தினரும் பூக்களை கொடுத்து வழிபடுவது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். கரூா் வையாபுரிநகா், வெங்கமேடு, செங்குந்தபுரம், லைட்ஹவுஸ் காா்னா், தாந்தோணிமலை, காந்திகிராமம், ராயனூா் போன்ற இடங்களில் பூத்தட்டுகள் எடுத்துவரும்போது, கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியிலும், ஜவஹா் பஜாரிலும் இரவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பூத்தட்டுகளை கண்டுகளிப்பா். பக்திகோஷத்துடன் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அம்மனுக்கு பூக்கள் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டினால் கரூா் நகரமே மின்னொளியில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT