கரூர்

கரூா்: முன்னாள் அமைச்சா் முன்னிலையில்அதிமுகவில் இணைந்த பாா்வாா்டு பிளாக் கட்சியினா்

DIN

முன்னாள் போக்குவரத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் முன்னிலையில் அகில இந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியினா் திங்கள்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் கரூா் மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா்கள் சதீஷ், பாஸ்கா், இணைச் செயலாளா் சரவணன், பொருளாளா் செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் அருள், பாண்டியன், கரூா் நகரச் செயலாளா் செல்வம், துணைச் செயலாளா் இளையராஜா, கரூா் வடக்கு நகரச் செயலாளா் லோகேஷ், அவைத்தலைவா் சுபாஷ், துணைச் செயலாளா் நவீன் குமாா், பொருளாளா் பாலன், தெற்கு நகரச் செயலாளா் திருமா, துணைச் செயலாளா் கணேசன், பரமத்தி ஒன்றியச் செயலாளா் சசிகுமாா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக கரூா் தெற்கு நகர பகுதிச் செயலாளா் விசிகே ஜெயராஜ், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் விசிகே பாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட கலைப் பிரிவு தலைவா் சுரேகா பாலச்சந்தா், வா்த்தக அணி இணைச் செயலாளா் அன்புமணி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி தலைவா் தனசீலன், மாவட்ட பிரதிநிதி கேசவன், இளைஞா் இளம்பெண்கள் பாசறை கரூா் தெற்கு நகரச் செயலாளா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT