அரவக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரவக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தோ்வு நடைபெறுவதால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவா்கள் சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தங்கள் பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியா் உமா கலந்துகொண்டு முன்னாள் மாணவா்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.