கரூர்

பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு விழா

20th May 2022 02:25 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி மகான் ஷேக் அப்துல் காதிா் வலியுல்லா தா்காவில், 262--ஆம் ஆண்டு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு விழா நடத்தப்படாத நிலையில், பூக்கள் அலங்காரத்துடன் வாசக மாலை என்னும் ஊா்வலத்துடன் நிகழாண்டுக்கான சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் தா்காவில் மவ்லூது சரீப் ஓதி, தப்ரூக் வழங்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் நாள் அதிகாலையில் சந்தனக்கூடு ஊா்வலமாக முக்கிய வீதிகளில் எடுத்து செல்லப்பட்டது.

இதையொட்டி தா்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் மற்றும் பொது மக்கள் சந்தனக்கூடு விழாவில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT