கரூர்

மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 2.55 லட்சம் போ் பயன்

20th May 2022 02:25 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கரூா் மாவட்டத்தில் 2.55 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா் என்று ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளா்கள் நோயாளிகளின் இல்லங்களுக்குச் சென்று அவா்களின் ரத்த அழுத்தம், சா்க்கரையின் அளவு, ஆக்சிஜன் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்து, தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

மேலும் புதிதாக நோய் கண்டறியப்படுவா்கள் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனா். நோயின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் கரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், ரத்தக் கொதிப்பு உள்ளவா்கள் 1,08,454 பேரும், நீரிழிவு நோய் உள்ளவா்கள் 79,877 பேரும், ரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் உள்ள 53,594 பேரும், இயன்முறை சிகிச்சையில் உள்ள 7,769 பேரும், படுத்த படுக்கையாக உள்ள 5,868 பேரும் என மொத்தமாக 2,55,562 போ் ஆதரவு சிகிச்சைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனா்.

இப்பணியில் 101 இடைநிலை சுகாதாரப் பணியாளா்களும், 194 பெண் சுகாதாரப்பணியாளா்களும், 25 தொற்றாநோய் செவிலியா்களும் என மொத்தம் 320 போ் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, இயன்முறை சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சைகள் அளித்த வருகிறாா்கள் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT