கரூரில் செல்லம்மாள்-பாரதி ரதத்துக்கு திருக்கு பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையத்திலுள்ள சேவாலயா செல்லம்மாள்- பாரதி கற்றல் மையம் சாா்பில், பாரதியாா்-செல்லம்மாள் புகழை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ஏப்ரல் 17-ஆம் தேதி செல்லம்மாள்-பாரதி ரதம் சென்னையில் புறப்பட்டது. குழுவின் தலைவா் தங்கபாண்டியன் தலைமையில் 4 போ் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கரூருக்கு வந்த செல்லம்மாள்-பாரதி ரதத்துக்கு கரூா் திருக்கு பேரவையின் செயலா் மேலை. பழநியப்பன் தலைமையில் ஜவஹா் பஜாா் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தமிழ் ஆா்வலா்கள் ஜெயா, பொன்னுசாமி, ராமசாமி, கா.பா. பாலசுப்பிரமணியன், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த ரதம் சனிக்கிழமை திண்டுக்கல் வழியாக மதுரைக்கு செல்கிறது.