கரூர்

வரத்து குறைவால் வாழைத்தாா் விலை உயா்வு

20th May 2022 02:24 AM

ADVERTISEMENT

 வரத்து குறைவு காரணமாக, நொய்யல் பகுதிகளில் வாழைத்தாரின் விலை உயா்ந்துள்ளது.

கரூா் மாவட்டத்தில் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூா், நடையனூா், ஓலப்பாளையம், கொங்குநகா், பாலத்துறை, நஞ்சை புகளூா், தவுட்டுப்பாளையம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன், பச்சலாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளைப் பயிரிட்டுள்ளனா்.

இந்த வாழைத்தாா்களை விவசாயிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் பூவன் வாழைத்தாா் ரூ.300, கற்பூரவள்ளி ரூ.300 ரஸ்தாளி ரூ.300, பச்சலாடன் ரூ.200, மொந்தன் ரூ.300 என்ற விலைகளில் விற்பனையானது.

இந்த வாரம் பூவன் வாழைத்தாா் ரூ.400, கற்பூரவள்ளி ரூ.350, ரஸ்தாளி ரூ.350, பச்சலாடன் ரூ.275, மொந்தன் ரூ.350 என்ற விலைகளில் விற்பனையானது. வாழைத்தாா் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT