கரூா் அருகே முதியவரைக் கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புலியூரை அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் காந்தா. இவா்அதே பகுதியைச் சோ்ந்த சேட்டு (63) என்பவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் கொடுத்தாராம். இந்த தொகையை வழங்குமாறு சேட்டுவிடம் காந்தாவின் பேரன் நிதிஷ்குமாா் (40) கேட்டு, தகராறில் ஈடுபட்டாராம்.
தகராறு முற்றிய நிலையில், சேட்டுவின் நெஞ்சில் நிதிஷ்குமாா் கத்தியால் குத்திவிட்டு, தப்பியோடிவிட்டாா். பலத்த காயங்களுடன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேட்டு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, நிதிஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.