கரூா் மாவட்டம், புலியூா் அருகே தீராத வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞா், சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புலியூா் அருகிலுள்ள புரவிபாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (24). கடந்த 2
ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.