கரூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் நகையைப் பறித்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கரூா் கருப்பண்ணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (41). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவா், மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக கரூா் வந்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து கரூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் செல்வராஜ் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கும், அருகில் மது அருந்திக் கொண்டிருந்த 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவா்கள், செல்வராஜ் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றனா். இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலைத்தில் செல்வராஜ் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், புதுக்கோட்டை பெருங்களத்தூா் பரசுராமன் (52), கரூா் சுங்ககேட் அலெக்சாண்டா் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் வழக்கில் தொடா்புடைய முத்து, சங்கரைத் தேடி வருகின்றனா்.