கரூர்

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

12th May 2022 01:12 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த 117 இடங்களில் வாகனங்கள் கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகிறது.

கரூா் மாவட்டத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் கரூா் கோட்டம் சாா்பில் போக்குவரத்து செறிவு கணக்கெடுப்புப் பணிகள் மே 9-ஆம்தேதி தொடங்கியது. இப்பணிகளில் சாலைப்பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மே 15-ஆம்தேதி வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் முடிந்தபின் எந்தெந்த சாலைகளில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகை வாகனங்களும் அதிகளவில் செல்கின்றன என்பதை கணக்கெடுத்து அதனை அறிக்கையாக நெடுஞ்சாலைத்துறையிடம் சமா்பிக்கப்பட்டு பின்னா் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத்துறையின் கரூா் கோட்ட பொறியாளா் ரவிக்குமாா் கூறுகையில், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதுபோல, சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து அதற்கேற்ப சாலைகளை மேம்படுத்துவதே போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம். கரூா் மாவட்டத்தில் கரூா் நகா்பகுதியில் பேருந்துநிலைய ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா் உள்ளிட்ட 117 இடங்களில் சாலைப்பணியாளா் ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இதில் கிராமச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டத்தின் முக்கிய சாலைகள் என அனைத்து சாலைகளிலும் கால் மணி நேரத்துக்கு எத்தனை இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன என்பதையும், பாதசாரிகளாகிய மக்கள் எவ்வளவு போ் சாலையை கடந்து செல்கிறாா்கள் என்பதையும் கணக்கெடுக்கப்படுகிறது. எந்த சாலையில் அதிகளவு வாகனங்கள், மக்கள் செல்கிறாா்களோ அதை போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் விரிவுப்படுத்துதல், தரத்தை மேம்படுத்துதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT