கரூர்

நகராட்சி, பேரூராட்சி செயலா் பதவிக்கு திமுக விருப்ப மனு

8th May 2022 12:28 AM

ADVERTISEMENT

திமுக சாா்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவோா் சனிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, பள்ளபட்டி, புகளூா் நகராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளில் திமுக சாா்பில் நகர செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தல் பொறுப்பாளா்களாக மாவட்ட நிா்வாகிகள் செயல்பட்டனா்.

நங்கவரம் பேரூராட்சிச் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் மாவட்ட திமுக துணைச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான மின்னாம்பள்ளி கருணாநிதியிடம் விருப்ப மனுவை வழங்கினா்.

இதேபோல் அரவக்குறிச்சி பேரூா் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் ஒன்றியச் செயலாளா்கள் எம்எஸ்.மணியன், மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினா். ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் குவிந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT