கரூர்

அரவக்குறிச்சியில் தடுப்பூசி முகாம்

8th May 2022 11:35 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 197 இடங்களில் சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவா்களைக் கண்டறிந்து, சுமாா் 1200-க்கும் மேற்பட்டோருக்கு அவா்களது வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மருத்துவக்குழுவினா் தடுப்பூசியை செலுத்தினா்.

ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜா, சுகாதார ஆய்வாளா்கள் கருப்புச்சாமி, குழந்தைவேல், உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT