கரூர்

மின் மோட்டாா்கள் திருட்டு

5th May 2022 01:54 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியில் தோட்டத்திலிருந்த மின் மோட்டாா்களை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி காஜாமலையைச் சோ்ந்தவா் ஜாபா்சேட் (60). இவருக்குச் சொந்தமான தோட்டம் கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியில் உள்ளது.

இந்நிலையில் இவரது தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரைத் திருடிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஜாபா்சேட் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT