கரூர்

கோயில்களில் வளா்பிறை சதுா்த்தி வழிபாடு

5th May 2022 01:57 AM

ADVERTISEMENT

 

கரூா்: சித்திரை மாத வளா்பிறை சதுா்த்தியையொட்டி, கரூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் பசுபதீசுவரா், புன்னம்சத்திரம் புன்னைவனநாயகி உடனுறை புன்னைவனநாதா் திருக்கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு 18 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்கள், அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பஙகேற்றனா்.

முத்தனூா் வருணகணபதி திருக்கோயில், சேமங்கி, மரவாபாளையம் , நொய்யல், குறுக்குச்சாலை அண்ணாநகா், அத்திப்பாளையம் , குப்பம், மூலிமங்கலம், கரைப்பாளையம், நடையனூா், தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT