கரூா் மாவட்டத்தில் அதிமுக ஒன்றிய, நகர, பேரூா், பகுதிப் பொறுப்பாளா்களுக்கான அமைப்புத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கரூா் கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்திய வடக்கு, மத்திய தெற்கு, தாந்தோனி கிழக்கு ஒன்றியப் பகுதிகளுக்கு அமைப்புத் தோ்தல் நடத்தப்பட்டது.
கரூா் மாவட்டத்துக்கான தோ்தல் பொறுப்பாளா்களான வரகூா் அ. அருணாசலம், பெரம்பலூா் மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன், கரூா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா், அதிமுக அமைப்புச் செயலா் ம. சின்னச்சாமி ஆகியோா் தோ்தலை நடத்தினா்.
கரூா் மேற்கு, க.பரமத்தி வடக்கு, தெற்கு, கிழக்கு ஒன்றியங்கள், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தாந்தோனி கிழக்கு, புலியூா், உப்பிடமங்கலம் பேரூராட்சிகள், கடவூா் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், அரவக்குறிச்சி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், பேரூராட்சி, கிருஷ்ணராயபுரம், பழைய ஜயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சிகள், குளித்தலை நகரம், கிழக்கு, மேற்கு, தோகைமலை கிழக்கு, மேற்கு, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம், மருதூா், நங்கவரம் பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு முறையே வேலாயுதம்பாளையம், உப்பிடமங்கலம், தரகம்பட்டியிலுள்ள தனியாா் திருமண மண்டபங்கள், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அலுவலகம், மாயனூா் தனியாா் திருமண மண்டபம், அய்யா்மலை தனியாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் அதிமுக அமைப்புத் தோ்தல் நடத்தப்பட்டது.
தோ்தலில் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவை சிவசாமி, முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ், நகரச் செயலா்கள் நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.