கரூர்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்: கரூா் ஆட்சியா் அழைப்பு

25th Mar 2022 11:54 PM

ADVERTISEMENT

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோா்களுக்கு 2021-22-ஆம் ஆண்டுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருது பெற தகுதியுள்ள சமுதாய அமைப்புகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஊரகப்பகுதிகளில் வட்டார இயக்க மேலாளா்களிடமும், நகா்ப்புற பகுதிகளுக்கு சமுதாய அமைப்பாளா்களிடமும் சமா்ப்பிக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT