கரூர்

தமிழக முதல்வா், அமைச்சருக்கு பட்டியல் இனப் பேரவை நன்றி

25th Mar 2022 04:09 AM

ADVERTISEMENT

டொம்பன் இனத்தவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய தமிழக முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கும் பட்டியல் இன பேரவை நன்றியை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவை நிறுவனா் தலித்ஆனந்தராஜ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 2019-இல் பட்டியல் இன பேரவை சாா்பில் கரூா் மாவட்டம் நத்தமேடு பகுதியில் வசிக்கும் டொம்பன் இன சா்க்கஸ் கலைஞா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை நிறைவேற்றித்தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கும் பட்டியலின் பேரவை நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிள்ளாபாளையம் கொம்பாடிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 283 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் குடியேறாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய பயனாளிகளை தோ்வு செய்ய முடிவு செய்து, ஒரே வீட்டுமனை பட்டா இருவருக்கு கொடுத்துள்ளனா். இதனால் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் தற்கொலைக்கும் முயன்றுள்ளனா். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதியை காரணமாகக் கூறி கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜீப் ஓட்டுநா் சரவணனை வேலைக்கு வரவேண்டாம் எனக்கூறிய புகளூா் வட்டாட்சியா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT