கரூர்

அமைச்சருக்குதரை, தள்ளுவண்டி வியாபாரிகள் நன்றி சுங்கவரி வசூல் ரத்து-

25th Mar 2022 04:08 AM

ADVERTISEMENT

கரூரில் தரைக்கடை சுங்க வரியை ரத்து செய்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கு கரூா் மாவட்ட தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் நலச்சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

கரூா் மாவட்ட தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.ஏ.ஸ்காட் தங்கவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கேபிள் எஸ்.முருகேசன் வரவேற்றாா். கௌரவ தலைவா் திருமாநிலையூா் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவா்கள் கேபிள் ராதாகிருஷ்ணன், மீனாட்சி, மாவட்ட துணை செயலாளா் விஷால் ராஜேஷ் உள்ளிட்டோா்முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நீண்டகாலமாக தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு சுங்க வசூல் செய்து கொண்டிருந்ததை திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனேயே சுங்க வரி வசூலிப்பதை ரத்து செய்ததற்கு தமிழக முதல்வருக்கும், மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கும் நன்றியை தெரிவிப்பது, சுங்கவரி வசூல் ரத்து செய்து வியாபாரிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு பாராட்டு விழா நடத்துவது, அவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது, இலவச காப்பீட்டு வசதிகளை செய்து தருவது, வியாபாரிகள் மேம்படும் வகையில் வங்கிகள் மூலமாக வங்கி கடன்களை பெற்று தருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT