கரூர்

அரவக்குறிச்சி அருகே 13 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

25th Mar 2022 11:56 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே 13 வயதுடைய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (43). அரிசி ஆலை உரிமையாளா். இவரது மகள் அக்ஷரா(13). இவா், கரூா் அருகே  காக்காவாடி பகுதியிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாணவி நீண்ட நேரம் கைபேசி பாா்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அக்ஷரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று, வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT