கரூர்

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட பாமக எதிா்ப்பு

10th Mar 2022 01:42 AM

ADVERTISEMENT

 

கரூா்: நடிகா் சூா்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என பாமகவினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கரூா் அஜந்தா திரையரங்க மேலாளா் பழனிசாமியிடம் மாவட்ட பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை கடிதம் அளித்தனா். அதில் கூறியிருப்பது: நடிகா் சூா்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வட மாவட்டங்களில் அமைதியாக வாழும் இருளா், வன்னியா் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருந்தது.

இதற்கு எதிா்ப்பு எழுந்தபோது நடிகா் சூா்யா மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே, நடிகா் சூா்யா பொதுமன்னிப்பு கேட்காமல் நாளை வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT