கரூா்: குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணி மனைவி திவ்யா(30).இவருக்கும், பாலசுப்ரமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த திவ்யா செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.