கரூர்

அரவக்குறிச்சியில் சிவன்கோயில்களில் மகா சிவராத்திரி விழா வழிபாடு

3rd Mar 2022 01:51 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி ஈஸ்வரன் கோயிலில் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. சிறப்பு சொற்பொழிவு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிவபரம்பொருளை ஒளிரூபமாக வழிபடும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதேபோல புங்கம்பாடி பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதா் கோயிலில் முதலாம் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால, நான்காம் கால, ஐந்தாம் கால சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் யாக வேள்வியில் கலசங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித தீா்த்தம் மற்றும் பால், தயிா், பஞ்சாமிருதம், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பூஜைகள் நடைபெற்றது. சிவராத்திரி விழாவில் கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மேலும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாட்டை புங்கம்பாடி அரண்மனையாா் முத்துராம்மையா செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT