கரூர்

கரூரில் மணல் மாட்டு வண்டிதொழிலாளா்கள் போராட்டம்

30th Jun 2022 11:22 PM

ADVERTISEMENT

 

கரூரில், மணல் மாட்டுவண்டித்தொழிலாளா்கள் வியாழக்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

கரூா் நொய்யல் நீா்வளத்துறை ஆதார அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் செயலாளா் கந்தசாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், சிஐடியு மாநிலச் செயளாளா் சி.ஜெயபால், மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கரூா் மாவட்டத்தில் அரசு அறிவித்த நான்கு மணல் குவாரிகளையும் திறக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை தடுத்து, உள்ளூா் மாட்டு வண்டித்தொழிலாளா்களுக்கு மணல் அள்ளும் உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முறையீடு நடைபெற்றது. இதில், மாட்டு வண்டித்தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT