கரூர்

சமுதாயக் கூடத்தைமீண்டும் பயன்பாட்டுக்குகொண்டுவர கோரிக்கை

30th Jun 2022 11:21 PM

ADVERTISEMENT

 

பவித்திரம் சமுதாயக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட பவித்திரம் காலனி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு உள்ளூரில் இருக்கும் சமுதாயக்கூடத்தை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் இப்பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியை செய்து வரும் வெளிமாநில கூலி தொழிலாளா்கள் கடந்த ஒரு ஆண்டுகளாக சமுதாயக்கூடத்தை ஆக்கிரமித்து விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகவே, சமுதாய கூடத்தை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT