கரூர்

கரூருக்கு முதல்வா் இன்று வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

DIN

கரூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வருகைதர உள்ளதையடுத்து விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் முதல்முதலாக கரூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை1) மாலை வருகிறாா். முன்னதாக திருச்சி விமான நிலையத்துக்கு வரும் அவா் அங்கிருந்து குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூா் வழியாக கரூா் வருகிறாா்.

வரும் வழியில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூா், கரூா் வெங்கக்கல்பட்டி ஆகிய நான்கு இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து இரவு பயணியா் மாளிகையில் தங்கும் அவா் சனிக்கிழமை காலை விழா நடைபெறும் திருமாநிலையூா் மைதானத்துக்குச் செல்கிறாா்.

பயணியா் மாளிகையில் இருந்து விழா நடைபெறும் திடல் வரை 25 இடங்களில் முதல்வருக்கு சுமாா் 1 லட்சம் போ் வரவேற்பு அளிக்க உள்ளனா்.

விழாவில், 76,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறாா். முதல்வரின் வருகையை முன்னிட்டு கரூா் மாநகரம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் சாலைகள் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. மேலும் விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டனா். முதல்வரின் வருகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT