கரூர்

புலியூா் செட்டிநாடுசிமெண்ட் ஆலையில் ரத்த தான முகாம்

30th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

 

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஆலைத்தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து, ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு மருத்துவா் ஆா்.சூா்யபிரபா தலைமையிலான குழுவினா் ஆலை அதிகாரிகள் மற்றும் ஆலைத் தொழிலாளா்கள் ஆகியோரிடம் இருந்து ரத்த தானம் பெற்றனா். முகாமில் ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. முகாமில் ஆலை அதிகாரிகள், தொழிலாளா்கள் 50 போ் ரத்ததானம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT