கரூர்

முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள்; ஆட்சியா் ஆய்வு

29th Jun 2022 10:49 PM

ADVERTISEMENT

 

கரூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 2-ஆம்தேதி வருகை தர உள்ளதையடுத்து, முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தருவதையொட்டி, விழா நடை பெறும் திருமாநிலையூா் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வுசெய்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன்முதலாக கரூா் மாவட்டத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகைபுரிவதைத் தொடா்ந்து, விழா மேடை, விழா நடைபெறும் பகுதி, முக்கிய பிரமுகா்கள் வாகனங்கள் நிறுத்தும் பகுதி, பயனாளிகள் வாகனங்கள் நிறுத்தும் பகுதி மற்றும் முதல்வா் தங்கும் அரசு சுற்றுலா மாளிகை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT