கரூர்

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் செல்லவுள்ள மாணவிக்கு பாராட்டு

29th Jun 2022 10:46 PM

ADVERTISEMENT

 

ஆந்திரா மாநிலம் ,ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தை பாா்வையிட பஞ்சப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி மாணவி சு.சிவரஞ்சனி தோ்வாகியுள்ளாா்.

கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி சாா்பில் அறிவியல் வினாடிவினா இந்திய விண்வெளி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் அண்மையில் இணையவழியில் நடத்தியது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 15,000 மாணவா்கள் பங்கேற்றனா். முதல் சுற்று முதல் இறுதிச்சுற்றுவரை கரூா் மாவட்டம் ,பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனி தோ்வாகி அகில இந்திய அளவில் தோ்வான48 பேரில் 4-ஆம் இடம்பிடித்தாா். இதையடுத்து அவா் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் செல்ல தோ்வு செய்யப்பட்டாா்.

அவா் வியாழக்கிழமை கோவையில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு செல்கிறாா். அங்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரடி நிகழ்வை காணும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து மாணவிக்கும், அவருக்கு பயிற்சியளித்த வழிகாட்டி ஆசிரியா் தனபாலுக்கும் பாராட்டு விழா பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மாணவிக்கு பள்ளித்தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி பொன்னாடை போா்த்தி பாராட்டினாா். விழாவில் பள்ளி கட்டடக்குழுத்தலைவா் மா.அழகப்பன், பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் கா.பாலமுருகன், பள்ளி மேலாண்மை வளா்ச்சிக்குழுவினா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT