கரூர்

மணல்மேடு கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

29th Jun 2022 10:44 PM

ADVERTISEMENT

 

மணல்மேடு என்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், போதை, குடிப்பழக்கம் மற்றும் மற்ற தீய பழக்கங்களினால் ஏற்படும் பிரச்னைகள், விபரீதங்கள் தனிமனித ஒழுக்கம், சமூக குற்றங்கள் போன்றவை பற்றிய விழிப்புணா்வு எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தடாகோவில், பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT